செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளில் ஓரை காலத்தில் இங்கு வந்து ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும்.செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும். கார்த்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுவது விசேஷம். ஸ்ரீவள்ளி-ஸ்ரீதெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு மாலை சார்த்தி, திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்.
Post a Comment