1980களில் பாலிவுட்டில் கனவு கன்னியாக வலம் வந்தவர் காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மகள் ரேகா. சென்னைக்கு வந்து என் மகள் தான் ரேகா என்று ஜெமினி வாயாலேயே சொல்ல வைத்தவர். தற்போது அவருக்கு 63 வயதாகிறது. இந்த வயதிலும் இளமையோடு இருக்கிறார்.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 19வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கடந்த 22ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதன் நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ரேகா 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக நடனம் ஆடி பார்வையாளர்களை வியக்க வைத்தார். அவர் நடித்த படங்களிலிருந்து ஹிட்டான பாடல்களுக்கு அவர் நடனம் ஆடினார்.
ரேகா ஆடி முடித்ததும் அதை பார்த்துக் கொண்டிருந்த பாலிவுட் நடிகர்களும், நடிகைகளும் மேடைக்கு சென்று அவருடன் இணைந்து ஆடி தங்கள் மகிழ்ச்சியையும், பாராட்டையும் தெரிவித்தனர். 21 ஆண்டுகளுக்கு பிறகு ரேகா மேடை ஏறி நடனம் ஆடியுள்ளார்.
Post a Comment