Ads (728x90)

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜீனாவுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தை நோக்கிப் பயணித்துள்ளனர்.

இன்றும் சில மணி நேரத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலரிடம் மனு ஒன்றையும் கையளிக்கவுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதிகோரி சுழிபுரம் காட்டுப்புலம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை முன்பாக மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே பாடசாலையில் கல்வி கற்ற மாணவியே கொலை செய்யப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget