Ads (728x90)

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படத்தில் அவர் மும்பை தாராவியில் வாழும் தாதாவாக நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தி நடிகர் நானா படேகர் அரசியல்வாதியாக நடிக்கும் இந்த படம் நில அரசியலை பேசுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜூன் 7-ந்தேதி வெளியாகும் காலா படத்தை அமெரிக்காவில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் காலா வெளியாகும் பல தியேட்டர்களில் ஒன்றான சினிமார்க் என்ற தியேட்டரின் டுவிட்டரில், தற்போது காலா படத்தின் கதைச்சுருக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

அது என்னவென்றால், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மும்பை தாராவி பகுதிக்கு சிறு வயதிலேயே செல்கிறார் காலா. ஒரு கட்டத்தில் அந்த பகுதியில் டானாக மாறுகிறார். பின்னர் அந்த பகுதி மக்களுக்காக போராடும் காலா திரைப்படத்தை காண வாருங்கள் என்று டுவிட்டா¢ல் பதிவிட்டுள்ளனர்.

ஒரு இந்திய திரைப்படத்தின் கதைச்சுருக்கம் அமெரிக்க தியேட்டரின் சமூகவலைதளத்தில் வெளியாவது இதுவே முதல்முறை என்கிறார்கள்.

Post a Comment

Recent News

Recent Posts Widget