Ads (728x90)

புதிய நீதிமன்றத்தில் முதல் விசாரணையாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழக்கை  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆட்சிக் காலத்தில் டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகர்த்த நூதனசாலை அமைக்கும் போது அரச நிதியை முறைகேடான முறையில் பயன்படுத்தியதாக கூறப்படும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இது தவிர, ராஜபக்ஷாக்களுக்கு எதிராகவுள்ள 10 வழக்குகளையும் துரிதமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாகவும் இது தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அரசாங்கத்தினால் 03 விசேட நீதிமன்றங்களை நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக அதில் ஒன்றை அமைத்து அதன் சாதகங்களை கருத்தில் கொண்டு ஏனைய நீதிமன்றங்களை அமைக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget