இன்று காலை புறக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவமொன்றில் கொழும்பு மாநகர சபை சுயாதீன குழு உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இன்று காலை 7.45 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான மாநகர சபை உறுப்பினர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment