சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யாழில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது விடுதலைப் புலிகள் தொடர்பில் தெரிவித்திருந்த கருத்துக்காக இவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கருத்துக்கள் தெற்கில் பலமடைந்திருந்தன.
இதேவேளை, விஜயகலாவை பதவி விலகும் வரை பார்த்திருந்ததாகவும், அவரை உடன் பதவி நீக்கம் செய்வதற்கு இந்த அரசாங்கத்துக்கு முடியாமல் போயுள்ளதாகவும் தெற்கு அரசியல்வாதிகள் ஊடகங்கள் வாயிலாக கருத்துத் தெரிவித்திருந்தனர்.
விஜயகலாவின் இராஜினாமா குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனை அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
Post a Comment