அரச பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் மற்றும் தேசிய பாடசாலைகள் என்பவற்றை ஒழுங்குப்படுத்துவதற்கு கல்வி மேற்பார்வை சபை ஒன்றை அமைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.கல்வித் தரத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் கொள்கை வேலைத்திட்டங்களுக்கு அமைய, கல்வி மேற்பார்வை சபையை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, கல்வி அமைச்சின் கொள்ளை திட்டமிடல் மற்றும் செயல்திறன் ஆய்வு தொடர்பான மேலதிக செயலாளர், பேராசிரியர் மதுரா வெஹேல்ல தெரிவித்துள்ளார்.
இது நியாயமான கல்வி வாய்ப்புகள், ஆசிரியர்களின் தகுதிகள் மற்றும் கல்வியூட்டல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான நடவடிக்கைகளை மாகாண ரீதியில் விரைவில் முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(
Post a Comment