Ads (728x90)

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி (பகல்-இரவு) மான்செஸ்டரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை வென்ற கையுடன் இந்த போட்டியில் இந்திய அணி களம் காணுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தொடரை வென்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் களம் இறங்கும்.

இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமானதாகும். எனவே இந்த போட்டி தொடர் இந்திய அணிக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக தீபக் சாஹர் அணியில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.

20 ஓவர் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 5 ஆட்டத்திலும், இங்கிலாந்து அணி 6 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget