அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது. அப்போது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி பேசினர்.இதன்பிறகு, அமெரிக்கா- வடகொரியா உறவில் புதிய அத்தியாயம் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுதங்களை கைவிடுவதில் உண்மையான அக்கறையுடன் வடகொரியா செயல்படுவதாக டொனால்டு டிரம்ப் நற்சான்றும் அளித்து உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ ஜூலை 5-ம் தேதி வடகொரியா செல்ல உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மைக் பாம்பியோவின் ஒரு வார கால சுற்றுப்பயணத்தின் போது, வடகொரியாவுடன் அணு ஆயுதங்களை அழித்தல் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். டோக்கியோ, ஹனோய், அபுதாபி, பிரஸ்ஸல்ஸ் ஆகிய நகரங்களுக்கும் பாம்பியோ செல்ல உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
முன்னதாக, ஜூலை 6 ஆம் தேதி இந்தியா - அமெரிக்கா இடையே நடைபெறுவதாக இருந்த 2+2 பேச்சுவார்த்தையை தள்ளிவைப்பதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சுஷ்மா சுவராஜிடம் நேற்று தெரிவித்து இருந்தது நினைவிருக்கலாம்.
Post a Comment