பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்தும் அதேவேளை, இன மற்றும் மத ஐக்கியத்தை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும் என சுற்றுலாத்துறை மற்றும் கிரிஸ்துவர் மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.மாத்தறை றுகுணு மாதா தேவாலயத்தின் வருடாந்த திருவிழா தொடர்பான கலந்துரையாடல் நேற்று பிற்பகல் தேவாலயத்தில் இடம்பெற்றது. இதில் அமைச்சர் ஜோன் அமரதுங்க உரையபற்றினார்.
தேசிய நல்லிணக்கப் பொறிமுறையைப் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இலங்கை ஒரு பன்மைத்துவ நாடாகும். அதனால், நாட்டுப் பிரஜைகளின் மத சுதந்திரத்திற்கு ஒரு போதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்றும் அமைச்சர் அவர் வலியுறுத்தினார்.
இந்த தேவாலயத்தில் ஒவ்வொரு வருடமும் திருவிழாவை நடத்துவதற்காக பௌத்த மக்களிடம் இருந்து கிடைக்கப் பெறும் ஆதரவையும் சுற்றுலாத்துறை மற்றும் கிரிஸ்துவர் மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க பாராட்டிப் பேசினார்.
Post a Comment