Ads (728x90)

துறை முகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய ஊடகப் பேச்சாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் நேற்று (02) இரவு நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரிகள் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இக்கட்சியில் ஊடகப் பேச்சாளராக அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேர் கொண்ட குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget