அரசியலமைப்பின் இருபதாவது திருத்தச் சட்ட மூலத்தை பாராளுமன்றில் நாம் தோற்கடிப்பதுடன் மக்களும் அதனை நிராகரிப்பர். 38 சரத்துகள் கொண்ட அத்திருத்தச் சட்டத்தில் 36 சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதிலிருந்து மக்கள் விடுதலை முன்னணியின் சாதூரியத்தைக் கண்டு கொள்ள முடிவதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றபோது,
இதன் இணைதேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் சொய்சா அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
இருபதாவது திருத்தச்சட்டம் பொதுஜன வாக்கெடுப்பிற்குச் சென்றால் அது மக்களுக்கு தகுந்த சந்தர்ப்பமாக அமையும். மேலும் அத்திருத்தச் சட்டமூலத்திற்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை. ஆகவே இருபதாவது திருத்தச் சட்டத்தை கூட்டு எதிர்க்கட்சி தோற்கடிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment