புழல் சிறையின் கைதிகள் அறையில் தொலைக்காட்சி, டைனிங் டேபிள் உள்ளிட்ட வசதிகள் இருப்பது வீடியோ மூலம் தெரியவந்தது. ஏற்கனவே கைதிகள் சொகுசாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.புழல் சிறையில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஐந்து கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். தமிழகத்தில் 6 சிறை கண்காணிப்பாளர்கள் மற்றும் புழல் சிறையில் 17 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 65 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் சிறைத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சோதனைகள் தொடர்ந்து நடைபெற்றாலும் புழல் விசாரணை கைதிகள் சிறையில் பீடி, சிகரெட்,கஞ்சா , லைட்டர், போதைப்பாக்கு ஆகியவற்றின் விற்பனையும் தடையின்றி நடக்கிறது. மேலும் பிரியாணி, மட்டன் குழம்பு உள்ளிட்ட அசைவ உணவு வகைகளும் விற்பனை செய்கின்றனர். ஆனால் முன்பை விட அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
ஒரு பீடி கட்டு தற்போது ரூ.500க்கும் ஒரு ஆம்லெட் ரூ.100க்கும் ஒரு பிளேட் சிக்கன்-65, ஆயிரம் ரூபாய்க்கும் மட்டன் குழம்பு 1,500 ரூபாய்க்கும் சிக்கன் பிரியாணி 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புழல் சிறையில் கைதிகள் பிரியாணி சமைப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது சிறையில் சொகுசு வசதிகள் இருந்தது தெரியவந்த நிலையில் கைதிகள் பிரியாணி செய்ததாக புதிய புகார் எழுந்துள்ளது.
Post a Comment