துபாயில் நடந்து வரும் ‘ஜிடெக்ஸ்’ தொழில் நுட்பகண் காட்சியில் பங்கேற்றுள்ள சோபியா ‘ரோபோ’ பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கிறது.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மனிதவடி வில், மனிதர்களின் செயல்பாடுகளைசெய்வது போன்று ‘ரோபோட் டிக்ஸ்’ தொழில் நுட்பத் தில் தயாரிக்கப் பட்ட ‘ரோபோ’ சோபியா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த ‘ரோபோ’வானது டேவிட் ஹான்சன் என்பவருக்கு சொந்த மானஹான் சன் ரோபோட்டிக்ஸ் என்ற ஹாங் காங் நாட்டுநிறுவனம் தயாரித் துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந் தேதி உருவாக்கப்பட்ட சோபியா ‘ரோபோ’வுக்கு சவுதி அரேபியா அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. இந்த ‘ரோபோ’ சூழ்நிலைக்கு தகுந்தவாறு தானே பேசி, தானே முடிவு எடுக்கும் திறன்கொண்டது.
இந்த ‘ரோபோ’ மனிதர்களை போலவே வாயசைவுடன் பேசும் திறன் வாய்ந்தது. அதாவது சோபியா ‘ரோபோ’வுடன் தொடர்ந்து 1 மணி நேரம் உரையாட முடியும். கேள்விகள் கேட்டால் இந்த ‘ரோபோ’ ஆங்கிலத்தில் சரளமாக பதிலளிக்கிறது.
சோபியா ‘ரோபோ’ ஏற்கனவே துபாயில் நடந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளது. தொடர்ந்து இந்தியா உள்பட பல்வேறு உலகநாடுகளுக்கு பயணம் செய்த சோபியா ‘ரோபோ’ தற்போது மீண்டும் துபாயில் நடை பெறும் ‘ஜிடெக்ஸ்’ தொழில் நுட்பகண் காட்சியில் கலந்து கொண்டு பார்வையாளர்களிடம் உரையாடி கவர்ந்து வரு கிறது.
இந்தகண் காட்சி கடந்த 14-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இங்கு வரும் பார்வையாளர்கள் அனைவரின் கவனத் தையும் சோபியா ‘ரோபோ’ ஈர்த்துள்ளது. இது தவிர பார்வையாளர் கள்கேட்கும் கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களையும் அள்ளித் தருகிறது.
இதனால் சோபியா ‘ரோபோ’வுடன் உரை யாடுவதற்காக மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
Post a Comment