Ads (728x90)

கரும்புச் சாறு பாகாகக் காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட கொதிநிலை வரும்போது அதன் சத்துகளில் மாற்றம் ஏற்படுகிறது. அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என்று மாற்றம் அடைந்த பின்னர் பிறவுண் நிறத்தில் கிடைக்கும் பொருளே கரும்புச் சீனியாகும்.

இந்தக் கரும்புச் சீனியில் வெல்லத்தைக் காட்டிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடிய அனைத்துச் சத்துகளும் உள்ளன. மேலும் அது உடலில்  தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் செயலையும் செய்கிறது.

கருப்பஞ்சீனியை நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் பயன்படுத்துவதால் இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி இரத்தத்தை சுத்தமாகிறது. மேலும் கருப்பஞ்சீனியை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.

பொதுவாக இனிப்பு உணவுகளை அதிகளவு உண்பவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதிலும் வெள்ளை சீனியை பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகள் இந்த பிரச்சனையை ஏற்படுத்தும். கருப்பஞ்சீனியை வெள்ளை சீனிக்கு பதிலாக பயன்படுத்துவதால்  குடல்களுக்கு அதிக வலுவூட்டி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

வெள்ளை சீனியில் உள்ள சில இரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை வியாதியை (நீரிழிவு) ஏற்படுத்த கூடும்.

நமது உடலில் எத்தகைய வெளிப்புற கிருமி தொற்றையும் தடுத்து நோய் ஏற்படாமல் காப்பது நமது உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியாகும். இதற்கு வலுவூட்டும் வேலையை செய்யக்கூடியது கருப்பஞ்சீனி.

எத்தகைய உணவுப்பொருட்களிலும் உள்ள தீய இரசாயன தன்மையை முறிக்கும் தன்மை கருப்பஞ்சீனிக்கு உள்ளதால் புற்று நோய் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்க, அதனை உட்கொள்ளலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.




Post a Comment

Recent News

Recent Posts Widget