Ads (728x90)

அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் மையம் கொண்டடிருந்த  புயல் ‘மைக்கேல்’ புளோரிடா மாகாணத்தையே நேற்று நள்ளிரவு புரட்டி போட்டுள்ளது.

முதலில் புளோரிடா மாகாணத்தை தாக்கிய புயல் பின்னர் அலபாமா, ஜார்ஜியா மாகாணங்களையும் தாக்கியது. மணிக்கு 200 - 240 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர காற்று வீசியுள்ளது.

அத்துடன் பலத்த மழையும் பெய்துள்ளது. சூறாவளியால் கடலிலில் கொந்தளிப்பு ஏற்பட்டடு. வழக்கத்தை விட 12 அடி உயரத்துக்கு இராட்சத அலைகள் எழுந்து வந்துள்ளன. இதனால் பல இடங்களில் நிலப்பரப்புக்குள் தண்ணீர் புகுந்தது.

புளோரிடா நகரின் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில் அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கிறனர். ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மரத்தினால் கட்டப்பட்ட வீடுகள் அதிகமாக உள்ளன. சூறை காற்றினால் இவை கடுமையாக சேதம் அடைந்துள்ளன. பல வீடுகளை சூறாவளி காற்று முற்றிலும் இழுத்து சென்று விட்டது.

கடலில் நிறுத்தப்பட்டு இருந்த படகுகள் கொந்தளிப்பில் சிக்கி கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளன. அவற்றில் பல படகுகள் உடைந்து சேதம் அடைந்து ஆங்காங்கே கடலில் மிதக்கின்றன. புயலால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க அரசு கூறியுள்ளது. புயலில் சிக்கி 13 பேர் இறந்துள்ளனர்.

மின்சாரமின்றி 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவை தாக்கிய அதிசக்தி வாய்ந்த புயல் இது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget