காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தின், மேல் மாகாணத்துக்கான அமர்வு நேற்று கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்றது. இந்த அமர்வுக்கு கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்து காணாமல்போனோரின் நூற்றுக்கணக்கான உறவினர்கள் கலந்து கொண்டதுடன் காணாமல்போன தமது உறவை தேடித் தருமாறும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் சந்தேக நபர்களாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தமது சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டுமெனவும், காணமலாக்கப்பட்டோருக்கான உறவினர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக மாதாந்தம் 6000 ரூபா வழங்கும்படியும் அரசிடம் பரிந்துரை செய்திருக்கின்றோம். அக்கொடுப்பனவுத் தொகை மாதமொன்றுக்கான செலவுகளுக்கு முற்றிலும் போதாது என்பதை உணர்ந்திருக்கின்றோம் எனவும் சாலிய பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் அப்பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. இவ்விடயத்தில் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்போம் என்றும் அதன் தலைவர் சாலிய பீரிஸ் கூறியுள்ளார்.

Post a Comment