இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் யுத்த குற்றங்கள் குறித்து உள்ள விசாரணையை நடத்தும் திறன் இலங்கைக்கு உள்ளது என்பதை சர்வதேச சமூகத்தை ஏற்கச் செய்தது தற்போதைய அரசாங்கமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் அரசாங்கத்தை அமைத்தவுடன் வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் நான் ஜெனீவாவிற்கும், நியுயோர்க்கிற்கும் விஜயம் மேற்கொண்டு நாங்கள் புதிய அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம், யுத்தத்தின் போது தவறுகள் இழைக்கப்பட்டிருந்தால் நாங்கள் உரிய நடவடிக்கையை எடுப்போம். சட்டத்தின் முன் அனைவரையும் சமமாக நடத்துவோம் என உரையாற்றினேன் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கா விட்டால் மகிந்த சர்வதேச நீதிமன்றத்தினால் கூட தண்டிக்கப்பட்டிருப்பார் என தெரிவித்துள்ள மங்களசமரவீர, மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக பயண தடைகளை சர்வதேச சமூகம் விதித்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment