கொழும்பில் சற்று முன்னர் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பு முகத்துவார பகுதியில் இன்று காலையில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
32 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார்.
மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த 4 பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment