Ads (728x90)

வட மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக 5 மாவட்டங்களில் 75 000 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு வீடுகள் சொத்துக்களுக்கு ஏற்பட்டபாதிப்புகளுக்காக நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக அரச நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மதுத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

இதற்காக மாவட்டசெயலாளரகள் ,பிரதேச செயலாளர்கள் மூலம் சேதவிபர ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். பிரதமர் அலுவலக்கில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

வட மாகாணத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த மக்களுக்கு சமைத்த உணவு,உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஊள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜீர அபேவர்தன இங்கு உரையாற்றினார். வெள்ள நிலைதணிந்துவருவதால் முகாம்களில் உள்ள மக்கள் மீண்டும் அவர்களது வீடுகளுக்கு திரும்பு வதற்கு முன்னர் பாதிக்கப்பட்டவீடுகளை சுத்தம் செய்தல் மற்றும் கிணறுகளைசுத்தம் செய்வதற்கு தெரண்டர் அமைப்புகளின் ஒத்துழைப்பை நாடவுள்ளதாகஅவர் தெரிவித்தார்.

இதேபோன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசநிவாரண உதவிகளுக்கு மேலதிகமாக தெற்கு மக்களினால் சேகரிப்பட்ட பொருட்களை 100 லொரிகளில் வடக்குக்கு அனுப்பி வைப்பதாக அமைச்சர் வஜிரஅபேவர்தன மேலும் தெரிவித்தார்.

இடர் முகாமைத்துவ பிரதியமைச்சர் ஜே.சி.அலவத்துவல மற்றும் பிரதமரின் செயலாலாளர் சமன் ஏக்கநாயக்கவும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget