Ads (728x90)

சாம்சங் நிறுவனம் இளைஞர்களின் தேவையை அறிந்து அவர்களுக்காக தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் தொடர்ந்து வெற்றிப் பாதையில் முன்னணியில் சென்று கொண்டிருக்கின்றது.

பல புதிய கேலக்ஸி ரக செல்போன் மாடல்களை அறிமுகம் செய்து தனக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொண்டது.

இந்நிலையில் சாம்செங் நிறுவனம் நோட்புக் 9 பென் என்ற லேப்டாப் சாதனத்தை அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டு வரத்திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நோட்புக் 9 பென் 13 இன்ச் டிஸ்பிலே மற்றும் 15 இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது வரைபடக் கலைஞர்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மென்பொருள் இன்டெல் 8 வது செயலியை கொண்டுள்ளது. விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளம் இவற்றுள் இடம் பெற்றுள்ளதால் உபயோகப்படுத்த அட்டகாசமாக இருக்கும்.

இதில் 54 வாட் பேட்டரி எச் டி .எம்.ஐ. போர்ட், யுஎஸ்பி போர்ட், தண்டர் போர்ட்,மைக்ரோ எஸ் டி போர்ட், என பல இணைப்புகள் இவற்றுள் உள்ளது.

எச்.டி.ஐ.ஆர் கேமரா  மற்றும் அதி நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த நோட்புக் 9 பென்  அடுத்த மாதம் அதாவது அடுத்த வருடம் ஜனவரி மாதம் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






Post a Comment

Recent News

Recent Posts Widget