தொல்லைகளை தாங்க முடியாமல், சென்னைக்கு ஓடும் தம்பி, அங்குள்ள தாதா சாய் தீனாவிடம் சேருகிறான். 18 வயதுக்கு உட்பட்டவர்களை வைத்து கூலிக்கு கொலை செய்யும் தொழில் செய்யும் சாய் தீனா, 18 வயது நிரம் பியதும் போட்டுத்தள்ளி விடுகிறார்.
இந்நிலையில் சென்னை மாநகருக்கு பணி மாறுதலாகி வரும் சப் இன்ஸ்பெக்டர் விஜய் ஆண்டனி. ஒரு கொலைக்குற்றவாளியை பிடிக்கும் அசைன்மெண்டை கையிலெடுக்கிறார். இறுதியில் அந்த குற்றவாளி அவரது தம்பி என்று தெரிந்தும் கூட, என்கவுன்டரில் போட்டுத் தள்ளுகிறார்.
தம்பியை போல் இனிமேல் ஒரு குற்றவாளியும் உருவாகக்கூடாது என்று நினைக்கும் விஜய் ஆண்டனி, இதற்கு மூலகாரணமாக இருக்கும் சாய் தீனாவை வேட்டையாட கிளம்புகிறார். முடிவு என்ன என்பது கதை. அமைதியான பேச்சு, வெறித்த பார்வை, எதையோ பறிகொடுத்த மனநிலை என, தன் வழக்கமான இமேஜில் இருந்து மாறுபட்டு, வெடிச்சத்தமும், வெட்டுக்குத்துமாக ஒரு படம் கொடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
போலீசை, ‘பெரிய புடுங்கியா...’ என்று ஒரு பெண் திட்டிவிட, ‘ஆமா. நாங்க புடுங்கிதான். உன்னோட புருஷன் குடிச்சிட்டு விழுந்து செத்துடக் கூடாதுன்னு, அவன் வாய ஊதச்சொல்லி, பத்திரமா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம்பாரு.
நாங்க புடுங்கிதான்’ என்று கண்கள் சிவக்க கத்தும்போது, விஜய் ஆண்டனி வேறு அவதாரமாக மாறி நிற்கிறார். ‘நீ ரொம்ப நல்ல பொண்ணா இருக்கே. உன்னை காதலிச்சிடு வேனோன்னு பயமா இருக்கு’ என்று நிவேதா பெத்துராஜிடம் இருந்து விலகிச் செல்வதும், பின்பு ஒட்டிக்கொள்வதுமாக, காதல் காட்சியிலும் அவரிடம் நல்ல மாற்றம் தெரிகிறது.
மாமூல் வாங்கும் பெண் போலீசாக, நிவேதா பெத்துராஜ் கலக்குகிறார். லோக்கல் லாங்குவேஜில் தெனாவட்டாக பேசி, இன்ஸ்பெக்டரையே கரெக்ட் பண்ணி காதலிக்க வைத்து ரகளை செய்திருக்கிறார். சாய் தீனா வழக்கமான வில்லன். திருநங்கை சப்-இன்ஸ்பெக்டராக நடித்துள்ள சிந்துஜா மனதில் நிற்கிறார். காமெடி ஏரியாவை நிவேதா பெத்துராஜும், சம்பத் ராமும் கவனித்துக் கொள்கின்றனர்.
இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு என்ன ஆயிற்று? பின்னணி இசையிலும் மற்றும் பாடலிலும் பெரிதாக அவர் செய்யவில்லை. கடமையை காப்பதற்காக தம்பியை சுட்டுக் கொன்றவர், மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர் போன்ற பில்டப்புடன் விஜய் ஆண்டனி கேரக்டர் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
அடிக்கடி மயக்கம் வரும் நோய் கொண்ட ஒருவரை எப்படி இன்ஸ்பெக்டராக பணிபுரிவதற்கு காவல்துறை அனுமதிக்கும் என்ற அடிப்படை லாஜிக் கூட இல்லை. என்கவுன்டரில் ஒருவனை சுட்டவுடன், வாக்கிடாக்கியில் விஜய் ஆண்டனிக்கு பதவி உயர்வு தகவல் வருகிறது. விஜய் ஆண்டனியின் உடல் குறைபாடு கூட வில்லன்களுக்கு தெரிந்திருக்கிறது.
இளம் குற்றவாளிகளை திருத்த சமைத்து போடுகிறார். பல கோடி ரூபாய் போதைப் பொருளை, ‘வந்து என் ஷூ லேசை கட்டிட்டு எடுத்துட்டு போ’ என்கிறார். ‘மீசையை எடுத்துட்டு வந்து நில்லு’ என்கிறார். வில்லனும், போலீசும் சவால் விட்டு நடுரோட்டில் அடித்துக் கொள்கிறார்கள்.
ஆனால் சுற்றி நின்று கொண்டிருக்கும் போலீசும், மக்களும் வேடிக்கை பார்க்கிறார்கள். முழங்காலில் குண்டடி பட்டும் கூட, ரேசில் ஓடுவது போல் ஓடுகிறார் விஜய் ஆண்டனி. இப்படி படம் முழுக்க லாஜிக் ஓட்டைகள். கஞ்சி போட்டு தேய்த்த மாதிரி ஒரு போலீஸ் படம் கொடுக்க முயற்சித்து இருக்கிறார்கள். திரைக்கதையில் கவனம் செலுத்தி, சில லாஜிக் ஓட்டைகளையும் அடைத்து இருந்தால், திமிரு புடிச்சவனை எல்லோருக்கும் பிடித்திருக்கும்.

Post a Comment