Ads (728x90)

2018-ம் ஆண்டுக்கான உலக அழகியாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கேட்ரியோனா கிரே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஓவ்வொரு வருடமும் உலக அழகிக்கானப் போட்டிகள் ஒவ்வொரு நாட்டில் நடைபெற்று வருகின்றன. அழகு சாதனப் பொருட்கள் விற்பனை மற்றும் அவற்றுக்கான சந்தையை ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்குதல் போன்றப் பல மில்லியன் டாலர் வணிகம் இந்த உலக அழகிப் போட்டிகளின் பின்னால் இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் 2018-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி தாய்லாந்தில் நடைபெற்றது. இது 67 வது உலக அழகிப் போட்டியாகும். 94 நாடுகளைச் சேர்ந்த 92 பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இதற்கான போட்டிகள் பல கட்டங்களாக பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டன.

அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கோஸ்டாரிகா, குராகோ, இங்கிலாந்து, ஹங்கேரி, இந்தோனேசியா, அயர்லாந்து, ஜமைக்கா, நேபாளம், பில்ப்பைன்ஸ், போலந்து, பியூரிட்டோ ரிகோ, தென்னாபிரிக்கா, தாய்லாந்து, அமெரிக்கா, வெனிசுலா, வியட்நாம் நாடுகளைச் சேர்ந்த பெண்கள் தகுதி பெற்றனர்.

இவர்களுக்கிடையே நடந்த போட்டியில் வியட்நாம், பியூரிட்டோரிகோ, பிலிப்பைன்ஸ், வெனிசுலா, தென் னாபிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த பெண்கள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். இறுதிச்சுற்றில் பிலிப்பைன்ஸை சேர்ந்த கேட்ரியோனா கிரே இந்த ஆண்டுக்கான உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

















Post a Comment

Recent News

Recent Posts Widget