Ads (728x90)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந்நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது.

ரணில் விக்ரமசிங்க இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஐந்தாவது தடவை இதுவாகும். இலங்கையின் 23 ஆவது பிரதமராக அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதனுாடாக கடந்த ஆறு வாரகாலமாக இலங்கையில் நீடித்த அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget