ஐக்கிய தேசியக் கட்சியில் தான் ஒருபோதும் இணையமாட்டேன் என்று சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அமைச்சுப் பதவி பெறவுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் வினவியபோதே துமிந்த திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
சுதந்திரக்கட்சிதான் என் தாய்வீடு. அதைவிட்டு செல்ல தயாரில்லை. கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். அவை விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கின்றேன்.
மஹிந்தவுடனும் எனக்கு கொள்கைரீதியான பிரச்சினைதான் இருக்கின்றது. என்பக்கம் நீதி இருப்பதாலேயே துணிவுடன் கதைக்கின்றேன்.
அதேவேளை புதிய கட்சி ஆரம்பித்து விட்டதாக மார்தட்டியவர்கள், எம்.பி. பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் மீண்டும் தாய்க்கட்சி நோக்கிவருகின்றனர். இத்தகைய செயற்பாடுகளைத்தான் நான் எதிர்க்கின்றேன்என தெரிவித்துள்ளார்.
Post a Comment