பழங்களை ஜூஸாக சாப்பிடுவதை விட பழமாக சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும்.
மஞ்சள் நிறத்திலுள்ள பழங்களில் கல்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. இதனால் எலும்புகள் பலப்படும். சிறுநீரகக் கோளாறுகள் நீங்குவதோடு, இரத்தம் சுத்தமடையும். மன அழுத்தத்தைப் போக்கும். ஜீரண சக்தியைக் கூட்டும்.
சிவப்பு நிற பழங்களில் வைட்டமின் ஏ சத்து அதிகம். இவை இரத்தத்தை விருத்தி செய்யும். இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அதிகரிக்கும். சிவப்பு நிற பழங்களுக்கு கண்பார்வையை தெளிவுறச் செய்யும் சக்தி உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்
ஆரஞ்சு நிற பழங்களில் பொட்டாசியம் மிகுந்துள்ளது. இது மன அழுத்தத்தைப் போக்கக்கூடியது. இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. பிறவுன் நிறப் பழங்கள் குடற்புண்களை ஆற்றும். வாய்ப்புண், வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.
டைபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை நிறப் பழங்களை அதிகம் சாப்பிட்டால் இளைத்த உடல் எளிதில் தேறும்.
ஊதா நிற பழங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதுஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் உகந்த மருந்தாகும். நுரையீரலைப் பலப்படுத்தி சுவாசத்தை எளிதாக்கும்.
Post a Comment