Ads (728x90)

எரிபொருள் நெருக்கடியினை முகாமைத்துவம் செய்ய பொதுமக்கள் துவிச்சக்கர வண்டியை பயன்படுத்துவதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்றிற்கு துவிச்சக்கர வண்டியில் செல்ல வேண்டும் என இலங்கை மின்சார சபை சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு மீள்நிரப்பல் முறைமையில் எரிபொருளை 03 நாட்களுக்கு தேவையான அளவில் விநியோகிக்கிறது. எதிர்வரும் நாட்களில் மின்விநியோகம் தடைப்படும் என்பதை அரசாங்கம் மறைமுகமாக குறிப்பிட்டு வருகிறது.

பொது பயணிகள் துவிச்சக்கர வண்டியை பயன்படுத்த முன்னர் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலில் பாராளுமன்றிற்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் துவிச்சக்கர வண்டியில் செல்ல வேண்டும். ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பாவனைக்கு அதிகளவில் எரிபொருள் செலவாகுகின்றது.

அரசியல்வாதிகள் அனைவரும் நாட்டு மக்களுக்கு ஆலோசனை வழங்க முன்னர், மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும். தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துவிச்சக்கர வண்டியில் பாராளுமன்றம் செல்ல முடியாவிடின் புகையிரதம், அரச மற்றும் தனியார் பேருந்துகளை பயன்படுத்த முடியும்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அவரது தரப்பினர்கள் பாராளுமன்றிற்கு துவிச்சக்கர வண்டியில் சென்றார்கள். தற்போதும் செல்லலாம் என தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget