Ads (728x90)

அண்மைய தொழிற்சங்க நடவடிக்கையின்போது, கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் புகையிரத ஊழியர்களை அச்சுறுத்தியமை தொடர்பில் புகையிரதத் திணைக்களம் பொலீஸ் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கையை மீறி பணிக்கு வருகை தந்த புகையிரத உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

புகையிரத செயற்பாட்டுத் தலைவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வழக்கமான கால அட்டவணையின்படி எந்த இடையூறும் இல்லாமல் புகையிரதங்கள் இயக்கப்படுவதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget