Ads (728x90)

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை அனுமதி அட்டை இதுவரை கிடைக்காத பரீட்சார்த்திகள் கல்வி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக பதிவிறக்கம் செய்யுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலைகள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுமதி அட்டை கிடைக்காத ஒரு விண்ணப்பதாரர் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் தேசிய அடையாள அட்டை எண் அல்லது குறியீட்டு எண்ணை உள்ளிட்டு அதன் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் அனுமதி அட்டையில் பெயர், பாடம் மற்றும் மொழி ஆகியவற்றில் திருத்தங்களைச் செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தகைய மாற்றங்களை ஒரு முறை மாத்திரமே செய்து கொள்ளலாம்.

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி 07ஆம் திகதி முதல் மார்ச் 05ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,439 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget