Ads (728x90)

நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் அதிகரித்தது. குறித்த தகவலை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

இதன்படி பெற்றோல் ஒக்டேன் 92 ரகம் 338 ரூபாவாகவும், பெற்றோல் ஒக்டேன் 95 ரகம் 374 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் 289 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 329 ரூபாவாகவும் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த வாரம் கொண்டுவரப்பட்ட வாகனங்களுக்கு ஏற்ப விநியோகிக்கப்படும் எரிபொருள் அளவு தொடர்பான கட்டுப்பாட்டையும் நீக்குவதாக அவர் தெரிவித்துள்ளார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget