Ads (728x90)

மோசமான பொருளாதார சிக்கலில் மாட்டியிருக்கும் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தான் கட்டவேண்டிய கடனுக்கான வட்டித் தவணையை கட்டத் தவறியுள்ளது.

இலங்கை 78 மில்லியன் டொலர் அளவுக்கு செலுத்தவேண்டிய கடன் வட்டித் தவணையை செலுத்துவதற்கான ஒரு மாத சலுகைக் காலமும் கடந்த புதன்கிழமை முடிந்த நிலையில் தவணை தவறியுள்ளது.

உலகின் இரண்டு பெரிய கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்களும் இலங்கை தவணை தவறியதாக அறிவித்துள்ளன. கடனாளர்களுக்கு முழு தவணையையோ அல்லது ஒரு பகுதி தவணையையோ ஒரு நாடு செலுத்த முடியாதபோது அந்நாடு தவணை தவறியதாகக் கொள்ளப்படும்.

இப்படி நடக்கும்போது முதலீட்டாளர்கள் மத்தியில் நாடு செல்வாக்கை இழக்கும். இதன் மூலம் சர்வதேச கடன் சந்தையில் கடன் வாங்குவது கடினமாகும். அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தின் மீதும், பணத்தின் மீதும் உள்ள நம்பிக்கை மேலும் பலவீனமடையும்.

இலங்கை 5 ஆயிரம் கோடி டொலர் அளவுக்கான கடனை மறு கட்டமைப்பு செய்யவேண்டும் என்று வெளிநாட்டு கடனாளர்களிடம் கோரியுள்ளது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget