இச்சந்திப்பின்போது 2023ஆம் ஆண்டு பாதீட்டில் தேர்தலை நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு விடுவிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார். இதற்கு சபாநாயகரும் தமது உடன்பாட்டை தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு பணம் விடுவிக்கப்படாதது குறித்து நிதியமைச்சின் செயலாளரை அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்
நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை குறைத்து மதிப்பிட எவருக்கும் உரிமை இல்லை எனவும் இந்நிலையை மாற்றும் அதிகாரம் சபாநாயகர் உண்டு எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நாளைய தினம் கட்சித் தலைவர்களின் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அங்கு தீர்மானிக்க முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Post a Comment