Public Learn என்பது உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இருந்து இலவச பாடநெறிகளை பயனர்களை வழிநடத்தும் ஒரு தளமாகும். இந்த தளமானது ரீஜண்ட் குளோபல் நிறுவனத்தால் (Regent Global) இயக்கப்படுவதோடு இலங்கையில் இதனை அறிமுகப்படுத்த இங்கிலாந்தில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை இளைஞர் சமூகத்தினருக்கான பொது கற்றல் தளத்தை (http://www.publiclearn.lk/) ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து. உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய பொருளாதார மாற்றத்திற்காக இலங்கை டிஜிட்டல் மயமாக்கலுடன் வேகமாக முன்னேற வேண்டும் என்று தெரிவித்தார்.
மஹிந்த தேரரின் வருகையுடன் பிறந்த இலங்கையின் கல்வியானது படிப்படியாக 03 நிலைகளின் கீழ் பரவியதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன்று டிஜிட்டல் மயமாக்கலுடன் திறந்த தளத்தில் அறிவைப் பகிரும் நிலைக்கு முன்னேறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நன்மையை இலங்கை மக்களுக்கு கிடைக்கச் செய்தமைக்காக ரீஜண்ட் குளோபல் நிறுவனத்தின் (Regent Global) கலாநிதி செல்வ பங்கஜ் உள்ளிட்டோருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
Post a Comment