நண்டில் வைட்டமின் ஏ, பி12, ஒமேகா 3, புரோட்டின், கொழுப்பு அமிலம் போன்ற கனிமசத்துக்களும் அதிகளவில் நிறைந்து காணப்படுகின்றன. இதில் கலோரிகள் மற்றும் கொழுப்புகளும் குறைவாகவே உள்ளதால் உடல் எடை பருமனை தடுக்கிறது.
நண்டில் உள்ள ஜிங்க் முகத்தில் எண்ணெய் சுரப்பதனை கட்டுப்படுத்தும் இதன் முகப்பருக்கள் வருவதை தடுக்கவும் செய்கிறது. புரோட்டின் சத்தினால் சருமம், முடி ஆகியவை ஆரோக்கியமாக இருக்கும். புரோட்டின் சத்து அதிகமாக உள்ளதால் தசைகள் சீரமைப்பிற்கு நல்ல மருத்துவ குணம் வாய்ந்தததாக உள்ளது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்கின்றனர்.
எலும்புகளின் வளர்ச்சிக்கும் இன்றியமையாததாக உள்ளது. மூளையின் வளர்ச்சிக்கும் மூளை மற்றும் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படவும் நண்டு உதவுகிறது. வைட்டமின் ஏ சத்தானது கண்பார்வை குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது. கல்சியம் சத்து நிறைந்து உள்ளதால் எலும்பு தேய்மானம் மற்றும் முடக்குவாதம் போன்ற பிரச்சினைகளை தடுக்கிறது.
குரோமிய சத்து உள்ளத்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் அளவையும் குறைக்கவும் பெரும் உதவியாக நண்டு உள்ளது. நண்டினை குழம்பு, கிரேவி மற்றும் சூப் வைத்து சாப்பிடுவார்கள். சூப் வைத்து சார்ப்பிடுவதால் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை மழைக்காலங்களில் வராமல் தடுக்கிறது. சுவாச கோளாறு பிரச்சினைகளையும் சரிசெய்ய உதவுகிறது.
Post a Comment