யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் அமைந்துள்ள மருத்துவமனைகளை சிறந்த மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேம்படுத்துவதன் மூலம் வட மாகாண மக்களுக்கு வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் இந்த சிறப்பு விஐயத்தை மேற்கொண்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவுகள், அவசர சிகிச்சை பிரிவு, இருதய சிகிச்சை பிரிவு மற்றும் ஆய்வகங்கள், சி.டி ஸ்கேன் பிரிவு, எலும்பியல் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு, , மருத்துவமனையின் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் அந்தத் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால செயல்பாடுகள் ஆகியவற்றை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு நோயாளி பராமரிப்பு சேவைகளை மிகவும் திறமையானதாக மாற்றுவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும் சுகாதார சேவைகளை வழங்குகிறது.
ஆண்டுதோறும் 20,000 க்கும் மேற்பட்ட மகப்பேறு அறுவை சிகிச்சைகளையும், 5,582 பிரசவங்களையும் மேற்கொள்கிறது. மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்காக ஆண்டுதோறும் 22,000 க்கும் மேற்பட்ட சிறு அறுவை சிகிச்சைகளும் 13,000 பெரிய அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் அதிநவீன ஆய்வகம் நோயாளிகளுக்கு பரந்த சேவையை வழங்குகிறது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ், மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மற்றும் பணியின் தரத்தை மேம்படுத்த விரைவான மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
Post a Comment