பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகள் http://www.doenets.lk மற்றும் http://www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளத்தில் சுட்டெண் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தம் 4 இலட்சத்து 78 ஆயிரத்து 182 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 3 இலட்சத்து 98 ஆயிரத்து 182 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.
2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாகவும், அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ சித்திகளை பெற்ற 13,392 மாணவர்கள் உள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை பரீட்சை மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் ஜூலை 14 முதல் 28 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment