சமீபத்திய இயற்கை அனர்த்தங்களால் பல நீர் விநியோக அமைப்புகள் பாதிக்கப்பட்டன.
இவற்றில் தற்போது 126 நீர் விநியோக அமைப்புகள் முழுமையாக சீரமைக்கப்பட்டு, மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
எஞ்சியிருக்கும் 30 நீர் விநியோக அமைப்புகளை முழுமையாக செயற்படுத்தும் நிலைக்குக் கொண்டு வருவதற்கான மீட்பு நடவடிக்கைகளும், செயற்திட்டங்களும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment