குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் விராட் கோலி 120 பந்துகளை சந்தித்து 135 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில் 350 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி 49.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 332 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியின் சார்பில் மெத்யூ ப்ரீட்ஸ்கே 72 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் இந்திய அணியின் சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதற்கமைய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1-0 என்ற அடிப்படையில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
Post a Comment