Ads (728x90)

இலங்கையின் 25 மாவட்டங்களையும் தாக்கி பேரழிவை ஏற்படுத்திய தித்வா சூறாவளியின் தாக்கத்தைத் தொடர்ந்து, அத்தியாவசிய சுகாதார சேவைகளைப் பலப்படுத்துவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் 175,000 டொலர் அவசரகால நிதியை வழங்கியுள்ளது. 

தித்வா சூறாவளி பாரிய வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் கடுமையான உள்கட்டமைப்பு சேதங்களை ஏற்படுத்தியதுடன், பல உயிரிழப்புகள், பரவலான இடப்பெயர்வு மற்றும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் வாழ்வாதாரங்களை முடக்கியது.

இந்த நிதி பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான அத்தியாவசிய சுகாதார சேவைகளை ஆதரிக்கும் விரைவுப் பதிலளிப்புக் குழுக்களுக்கும், அத்துடன் நோய் தாக்கங்களை சரியான நேரத்தில் கண்டறிந்து பொருத்தமான பதிலளிப்பை எளிதாக்குவதற்கும் முக்கியமான சுகாதார தகவல் முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் என்று இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி ராஜேஷ் பாண்டவ் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget