Ads (728x90)

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் 2026 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். 

எனினும் திகதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, பேரிடர்களால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மேலும் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget