Ads (728x90)

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நேற்று நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணத் தொடர் போட்டியில் பாகிஸ்தான் அணி ஐக்கிய அமெரிக்கா அணியை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பெற்றது. 

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்கா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 191 ஓட்டங்களை பெற்றது. 

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சாஹிப்சதா பர்ஹான் அதிரடியாகத் 73 ஓட்டங்களையும், பாபர் அசாம் 46 ஓட்டங்களையும், ஷதாப் கான் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

பந்துவீச்சில் அமெரிக்கா அணி சார்பாக ஷாட்லி வான் ஸ்கால்க்விக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனையடுத்து 191 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா அணியால், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. 

அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. 

பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் ஷஹீன் அப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 


 

Post a Comment

Recent News

Recent Posts Widget