போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நேபாளம் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஸ்கொட்லாந்து அணியின் சார்பில் மைக்கேல் ஜோன்ஸ் 71 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
தொடர்ந்து 171 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் நேபாளம் அணியின் சார்பில் அதிகபட்சமாக திபேந்திரா சிங் ஐரி 50 ஓட்டங்களையும் மற்றும் குஷால் புர்த்தேல் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.
Post a Comment