நேற்று பிற்பகல் நுவரெலியாவில் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டின் மத்திய மாகாண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
எந்தவொரு பிள்ளையும் போதைப்பொருள் அச்சுறுத்தலால் பலியாகாத ஒரு நாட்டையும், எந்தவொரு தாய், தந்தை அல்லது குடும்பம் போதைப்பொருள் கொடுமையால் பாதிக்கப்படாத ஒரு சமூகத்தையும் நாம் கட்டியெழுப்ப வேண்டும் என்பதையும் அவர் இங்கு வலியுறுத்தினார்.கிராமங்கள் முழுவதும் பரவி தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பில் தெளிவுடனும், அதை ஒழிக்க உண்மையான தேவையுடனும் செயற்படும் நாம், அந்த செயற்பாட்டை நிறைவேற்றவில்லை என்றால், அது ஒருபோதும் யதார்த்தமாகாது என்பதைச் சுட்டிக்காட்டி, காத்திருக்காமல் நமது பொறுப்புகளை நிறைவேற்றி இந்த தேசிய பேரழிவிலிருந்து நாட்டைக் காப்பாற்ற அனைவரும் கைகோர்ப்போம் என்றும் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை என்றும், சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த நாட்டில் குற்றவாளிகள் அதிகாரத்தை கைகளில் வைத்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியதுடன், 2026 ஆம் ஆண்டு என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனபதை உயிர்ப்பிக்கும் ஆண்டாக மாறும் என்றும் தெரிவித்தார்.சட்டத்தின் ஆட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. சட்டம் சிலந்திவலையைப் போன்றது என்பார்கள். சிறிய விலங்குகள் சிக்கிக் கொள்ளும் பெரியவை தப்பித்துக் கொள்ளும் என்பார்கள். இவ்வாறு தான் பொதுமக்கள் மத்தியில் சட்டம் தொடர்பான நம்பிக்கை காணப்படுகிறது.
ஆனால் நாட்டை கட்டியெழுப்புவதற்கு சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்ற வசனத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.2027 ஆம் ஆண்டில் மூன்றாவது சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதால், அதன் பின்னர் அரச சேவையின் ஏனைய கொடுப்பனவுகளையும் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.




Post a Comment