Ads (728x90)

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

புதுடெல்லியில் இடம்பெறும் ”AI Impact 2026” மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியா சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தமைக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியப் பிரதமருக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் இந்தியா – இலங்கை இடையிலான வரலாற்று மற்றும் பண்பாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, பொருளாதார, வர்த்தக மற்றும் கலாசார துறைகளில் உள்ள ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் விரிவான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. பிராந்திய மட்டத்திலும், இருதரப்பு மட்டத்திலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கி செயல்படுவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.




Post a Comment

Recent News

Recent Posts Widget