இதன்படி அரச மற்றும் அரச அணுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதேநேரம் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக மீண்டும் பாடசாலைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி திறக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி பெப்ரவரி 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
நாடளாவிய ரீதியில் 3,545 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சையை நடத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment