Ads (728x90)

மும்பையில் நடைபெற்ற ஐசிசி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 15ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியீட்டியது.

இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ரதபோர்ட் 76 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். 

இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் ஜெமி ஓவர்டன் மற்றும் ஆதில் ராசிட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்தநிலையில் 197 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget