Ads (728x90)

ஈரானுக்கு நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு. இதுதவிர வேறு எவ்வித சமரச பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப்பதிவில் பதிவிட்டுள்ளார்.

நிபந்தனையற்ற சரணாகதியைத் தவிர ஈரானுடன் வேறு எந்த ஒப்பந்தமும் கிடையாது. அதற்குப் பிறகு சிறந்த மற்றும் ஏற்றுக் கொள்ளத்தக்கத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாங்களும் எங்களது அற்புதமான மற்றும் மிகவும் துணிச்சலான கூட்டாளிகளும் இணைந்து, ஈரானை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்க அயராது உழைப்போம்.

இதன் மூலம் ஈரானைப் பொருளாதார ரீதியாக முன்னெப்போதையும் விடப் பெரியதாகவும், சிறந்ததாகவும் மற்றும் வலிமையானதாகவும் மாற்றுவோம். ஈரானுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் அமையும். ஈரானை மீண்டும் சிறந்த நாடாக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget