மக்கள் அதிக நேரம் வெயிலில் இருப்பதைத் தவிர்த்து, போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதிக வெப்பநிலையால் வெப்பத் தடிப்புகள், தோலில் எரிச்சல் மற்றும் பூஞ்சை தொற்று போன்ற பொதுவான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
சிறுவர்களின் தோல் மிகவும் மென்மையானது என்பதாலும், அவர்கள் வெளியில் அதிக நேரம் விளையாடுவதாலும் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
அதிகப்படியான வெப்பம் சிறுவர்களிடையே நீர் சத்து குறைபாட்டை உண்டாக்கும் எனவும், இதனால் தூக்கமின்மை, சோர்வு மற்றும் பசியின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Post a Comment