இன்று கொழும்பு பி.டி.சிறிசேன மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை பெண்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்குவதோடு, பொருளாதார உதவி, வீட்டு வசதி மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான பாதுகாப்பை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
துயரம், வலி மற்றும் பெரும் சுமைகளைத் தலையிலும், இதயத்திலும் சுமந்து கொண்டு ஏங்கும் பெண் தலைமுறைக்கு, புன்னகை நிறைந்த எதிர்காலத்தை உருவாக்கித் தருவதே எமது அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அதற்கான திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.அத்துடன் ஒரு அரசாங்கம் சிறந்ததா என்பதைத் தீர்மானிப்பதற்கான அளவுகோல், அந்த அரசாங்கத்தின் மீது பெண்கள் கொண்டுள்ள நம்பிக்கையே ஆகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நீண்டகாலமாக வலி, கஷ்டங்கள் மற்றும் பாரமான சுமைகளை சுமந்து வரும் இலங்கை பெண்களுக்கு "புன்னகையுடன் கூடிய எதிர்காலத்தை" கட்டியெழுப்புவதே. அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி சில முக்கிய விடயங்களைக் கோடிட்டுக் காட்டினார்.
இதன்படி ஒவ்வொரு பெண்ணும் சிறுமியும் நம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும் வாழ்வதை உறுதி செய்யவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க சட்டங்களை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
அதேபோன்று குடும்பங்களின் சுமையைக் குறைக்க வீடமைப்பு மற்றும் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களையும் ஜனாதிபதி தெரிவித்தார். இதற்கமைய 2026 ஆம் ஆண்டில் 31,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது என்றார்.



Post a Comment